வெற்றி பயணம்
மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதுமட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். மேலும், இதில் கிரிக்கெட் பயிற்சியாளராக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இதனிடையே தமிழ் நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கை படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கை படத்தை சிவகார்த்திகேயன் இயக்கி, நடிக்கப்போவதாக கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.