8 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரம் சரிவடைந்துள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்யுள்ளார்.
விசிக திருமாவளவன்
நேற்று சாத்தான்குளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ஒன்றிய பாஜகவின் 8 ஆண்டு கால ஆட்சியை போன்று இதுவரை இந்திய நாடு பார்த்ததில்லை. இந்திய பொருளாதாரம் அதல பாதாள அளவிற்கு சரிந்து இருக்கிறது. மக்களிடையே இருந்த நல்லிணக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இளைஞரிடையே வேலை வாய்ப்புகள் இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. சாதி, மதமாக மக்கள் பிரிந்து இருக்கின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான இந்த 8 ஆண்டுகால பாஜக ஆட்சி அதானி, அம்பானி ஆகியோரது நலன்களை பாதுகாக்கின்ற ஆட்சி. உழைக்கின்ற மக்களுக்கு எதிரான ஆட்சியாக உள்ளது என திருமாவளவன் கூறியுள்ளார்.

