இன்று முதல் தெலுங்கு சினிமா படப்பிடிப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புஷ்பா 2ம் பாகம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புஷ்பா 2
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியான படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படம் திரையரங்கில் 350 கோடி வரை வசூல் செய்தது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வேலை நிறுத்தம்
இந்நிலையில், நடிகர்களின் சம்பளம், விநியோகஸ்தர்கள் நஷ்டம், தொழிலாளர்களின் போராட்டம் ஆகிய பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இன்று முதல் திரைப்பட தயாரிப்பை நிறுத்துவது என்று தெலுங்கில் சினிமாவின் 24 சங்கங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளது. இதனால் இந்த மாதம் தொடங்குவதாக இருந்த புஷ்பா 2ம் பாகம் படப்பிடிப்பு தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

