ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராமராவின் மகள் கே. உமா மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை
ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி. ராமராவின் மகளும், சந்திரபாபு நாயுடுவின் உறவினருமான கே. உமா மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உமா மகேஸ்வரி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை ஐதராபாத், ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் மகேஸ்வரி உடல்நலக்குறைவு காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

