சமூகம்தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு !

கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்ட 108 பேரின் நீதிமன்ற காவல் வருகிற 12ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியமூர் தனியார் பள்ளியின் விடுதியில் 12ம் மாணவி ஒருவர் கடந்த 13ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதனால் கடந்த 17ம் தேதி நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையில் முடிந்தது. மேலும், இந்த கலவரத்தில் ஈடுபட்ட 108 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் கடந்த 18ம் தேதி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதனையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முகமது அலி, அவர்களின் நீதிமன்ற காவலை வருகிற 12ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

Related posts