கலைஞர் பேனா நினைவுச் சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்திடம் அனுமதி கோரி தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
தமிழக அரசு கடிதம்
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கியப் பணி மற்றும் எழுத்து பணியை போற்றும் விதமாகவும், அவருக்கு மரியாதையை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அவர் பயன்படுத்திய பேனாவின் மாதிரி வடிவத்தை 134 அடி உயரத்திற்கு பிரமாண்ட சிலையாக சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க முடிவு செய்தது. இந்நிலையில், மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஒப்புதல் அளித்த நிலையில் பேனா நினைவு சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி கோரும் நடைமுறைகளை தமிழக பொதுப்பணித்துறை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கான சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள ஆய்வு எல்லைகளை கோரி மத்திய சுற்றுசூழல்துறை அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டு குழுவிற்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது. மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திலிருந்து நேரடியாக கடலுக்குள் கண்ணடிப்பாலம் வழியாக நடந்து செல்லும் வகையிலான திட்டத்தின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

