அரசியல்தமிழ்நாடு

கோவையில் பாஜக மற்றும் திமுகவினரிடையே மோதல் – குழு அமைத்து தீர்வு காணவேண்டும் !

கோவை பீளமேடு பகுதியில் முதல்வர் புகைப்படத்துடன் இருந்த சுவரொட்டியை பா.ஜ.கவினர் கிழித்த நிலையில், அங்கு ஒன்று திரண்ட திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பாஜக, திமுகவினரிடையே மோதல்

கோவையில் கொடிசியா அருகே பாஜகவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவினாசி சாலையில் உள்ள மேம்பால தூண்களில் திமுக சுவரொட்டி ஒட்டுவது தொடர்பாக பாஜகவினர் மறியல் செய்தனர். மேலும், திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்களை அகற்ற வேண்டும், இல்லாவிட்டால் பாஜகவின் போஸ்டர்களும் ஒட்ட அனுமதிக்க வேண்டும் என கூறி மறியல் போராட்டம்
நடத்தினர். மேம்பாலத்தில் ஒட்டப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் புகைபடத்துடன் கூடிய திமுக சுவரொட்டிகளை பாஜகவினர் கிழித்ததால் அங்கு பரபரப்பை ஏற்பட்டது.

இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில் இதனையடுத்து சுவரொட்டிகளை கிழித்து ரகளையில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். பீளமேடு ஹோப்ஸ் பகுதியில் பாஜாகவினர் கழித்து முதலமைச்சரின் புகைப்படம் அடங்கிய போஸ்டரை திமுகவினர் மீண்டும் ஒட்டினர். மேலும், வரும் 16ம் தேதிக்குள் அமைதி குழு கூட்டம் நடத்த வேண்டும் என பாஜக தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts