Editor's Picksசினிமாவெள்ளித்திரை

ஆஸ்கர் போட்டியில் களமிறங்கிய காந்தாரா!

ஆஸ்கர் விருது

கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய வசூல் செய்த கன்னட திரைப்படம் காந்தாரா. ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இத்திரைப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் வசூல் சாதனை செய்தது. ரூ.8 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ.500 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய பிரிவுகளில் காந்தாரா படம் இடம்பெற்றுள்ளது. இதனை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Related posts