சமூகம்சினிமா

‘துணிவு’ கொண்டாட்டம் ; ஒருவர் உயிரிழப்பு!

உயிரிழப்பு

இயக்குனர் எச்.வினோத், நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் உலகமெங்கும் இன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இதன் முதல் காட்சி நள்ளிரவு 1 மணிக்கு ரசிகர்களின் ஆரவாரத்துடன் திரையிடப்பட்டது. இதனையொட்டி நேற்று இரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு குவிந்தனர். இதனிடயே சென்னை, கோயம்பேடு ரோகினி திரையரங்கிற்கு துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் கொண்டாட்ட மிகுதியில் சாலையில் சென்ற லாரி மீது ஏறி நடனமாடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.

பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த அஜித் ரசிகர் உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts