‘ஆர்ஆர்ஆர்’
ராஜமௌலி இயக்கத்தில் உலகமெங்கும் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆலியா பட், பிரகாஷ் ராஜ், அஜய் தேவ்கான், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் சாதனை செய்தது. இதனிடையே இந்த படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. இதற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.
வாழ்த்து
இந்நிலையில், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படக்குழுவினருக்கு நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘தொடர்ந்து பார் இந்தியா புகழ் பெறுகிறது. ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருது வென்றுள்ளது. முன்னமே யூட்யூபில் 11 கோடிப் பார்வைகளைத் தாண்டிய பாடல் இது. வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.