சினிமாவெள்ளித்திரை

வாரிசு பொங்கல் விருந்தா ? வெறும் லந்தா ? – review!

வாரிசு படம் 

நடிகர் விஜய் நடிப்பில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் வாரிசு. இப்படத்தை இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்க, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குடும்ப சென்டிமென்ட்டும், தொழில் போட்டியும் தான் வாரிசு படத்தின் பிரதான கதை. விஜய்யின் வழக்கமான அறிமுகக் காட்சி, கண்டதும் காதல் என தொய்வுடன் தொடங்கும் முதல் பாதியை தமனின் இசையும், யோகிபாபுவின் காமெடியும் காப்பாற்றுகிறது.

படம் எப்படி இருக்கு

அடுத்தடுத்து கணிக்கும் வகையில் திரைக்கதை நகர்வது படத்திற்கு பெரிய மைனஸ். விஜய்யின் துள்ளலான நடிப்பும், அவரின் நடனமும் திரையில் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைக்கிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா படத்தின் கூட்டத்திற்கு நடுவில் தொலைந்துவிட்டார். மேலும், ரஞ்சிதமே பாடல் ரசிக்க வைத்தாலும், கதையுடன் ஒட்டவில்லை.

Related posts