லூசிபர்-2
பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான மலையாள படம் லூசிபர். இந்த படம் அங்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்தை சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார் இயக்குனர் மோகன் ராஜா. தமிழில் ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், தனி ஒருவன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய மோகன் ராஜா தற்போது நேரடி தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘எம்புரான்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
#L2E EMPURAAN. The journey begins. 🙂🙏 https://t.co/9phSeMGtqV@Mohanlal #MuraliGopy @antonypbvr @aashirvadcine pic.twitter.com/yQEV1uo0cR
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) August 17, 2022

