புதுச்சேரி சுற்றுலா துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா நடைபெறவுள்ளது.
மது திருவிழா
புதுச்சேரியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் நிறுவனங்களுடன் இணைந்து ‘உணவு மற்றும் ஒயின் திருவிழா’ என்ற நிகழ்ச்சிக்கு சுற்றுலா துறை ஏற்பாடு செய்துள்ளது. பழைய துறைமுக வளாகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் இந்த உணவு மற்றும் ஒயின் திருவிழாவில் மது பிரியர்களை குதூகலப்படுத்தும் விதமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒயின் வகைகள் இடம்பெறவுள்ளன.
வார இறுதி நாட்கள் என்பதால் உணவு மற்றும் ஒயின் திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணனும் கூறியுள்ளார். புதுச்சேரியில் உள்ள பிரபல ஹோட்டல்கள் கலந்துக்கொண்டு விதவிதமான உணவுகளை விருந்து உள்ளது. மேலும், இசைக் கச்சேரி, மேஜிக் ஷோ, விளையாட்டு மற்றும் பல நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

