புதிய அப்டேட்
சந்தானம் நடிப்பில், கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிக்’. இதில் தன்யா போப், கோவை சரளா, ராகினி திரிவேதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்க, ஃபார்டியூன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. அண்மையில் இதன் டப்பிங் பணிகளை நிறைவு செய்தார் சந்தானம்.
இந்நிலையில், ‘கிக்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் நாளை மாலை 6 மணியளவில் வெளியாகும் என படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Get ready for something special. A walk into the look and feel of #KICK 🤞 coming your way tomorrow at 6.03PM!#கிக் #SantasKick #ActionComedy @iamsanthanam @iamprashantraj @TanyaHope_offl @raginidwivedi24 @ArjunJanyaMusic @iamnaveenraaj pic.twitter.com/v5dcK7w1u5
— Fortune films (@Fortune_films) January 11, 2023