சினிமாவெள்ளித்திரை

கவனம் ஈர்க்கும் ஹிப் ஹாப் ஆதி பட ஃபர்ஸ்ட்லுக்!

புதிய படம்

தமிழில் பிரபல ராப் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் திகழ்பவர் ஹிப்ஹாப் ஆதி. ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தனி ஒருவன், அரண்மனை-2, இமைக்கா நொடிகள், கோமாளி போன்ற வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி தற்போது வீரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஃபர்ஸ்ட்லுக்

இதனைத்தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இந்த படத்தை இயக்குகிறார். இந்நிலையில், இப்படத்திற்கு ‘பி.டி.சார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related posts