உணவு

இனி தினமும் உணவில் பீன்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்! – மருத்துவ குணங்கள் நிறைந்த பீன்ஸ் பற்றி ஒரு சிறு பார்வை

நாம் அன்றாடம் உணவாக பயன்படுத்தும் காய்கறிகளில் மிகவும் விலை மலிவானதும், அதே நேரம் உடலுக்கு பல சத்துக்களை தரவல்ல ஒரு காய்தான் பீன்ஸ். ரத்த சர்க்கரை அளவை குறைப்பதால் சர்க்கரை நோய்க்கு எதிராக செயல்படுகிறது.

இதனாலேயே நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி, தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைப்பதால் இதய நோய் அபாயத்தையும் தடுக்கிறது.

french beans

உணவுக்குப் பிந்தைய ரத்த குளுக்கோஸ் கட்டுப்பாடு மற்றும் சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைத்தல் ஆகிய பல நன்மைகளைத் தரும் பீன்ஸில் நார்ச்சத்து மற்றும் தாவர புரதங்கள் அதிகமாக இருப்பதால் அவை வயிறு நிரம்பிய மனநிறைவை அதிகரிக்கும். அதனால் உடல் எடை மற்றும் கொழுப்பைக் குறைக்கும்.

பீன்ஸை உணவில் சேர்த்துக்கொள்வதால், உடலில் நன்மை பயக்கும் இரைப்பை குடல் பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது, இதன் மூலம் பல நோய்களின் அபாயத்தை குறைக்கிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தைக் கொண்டிருப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது.

பச்சை பீன்ஸ் கரையக்கூடிய மற்றும் கரையாத ஃபைபர்களின் வலுவான கலவையை வழங்குகிறது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டியது அவசியம்.

பீன்ஸில் உள்ள சத்துக்கள் :

பீன்ஸ் தாவர புரதத்தின் மூலமாகவும் சைவ உணவு உண்பவர்களின் புரதத்துக்கான மூலமாகவும் விளங்குகிறது. பீன்ஸில் உள்ள ஃபோலேட் (Folate) சத்தானது இதயத்தின் ஹோமோசைஸ்டீன் (Homocysteine) அளவை சரியான முறையில் பராமரிப்பதன் மூலம் இதயத்தை பாதுகாக்கிறது.

beans

பச்சை பீன்ஸ்களில் லுடீன் (Lutein), பீட்டா கரோட்டின் (Beta-carotene), வயலக்ஸாந்தின் (Violaxanthin) மற்றும் நியோக்சாண்டின் (Neoxanthin) இருப்பதை சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

சில சந்தர்ப்பங்களில், பச்சை பீன்ஸில் இருக்கும் இந்த கரோட்டினாய்டுகள் (Carotenoid) மற்ற கரோட்டினாய்டு நிறைந்த காய்கறிகளான கேரட் மற்றும் தக்காளி போன்றவற்றைவிடவும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

மேலும், அவற்றில் உள்ள குளோரோபில் (chlorophyll) உள்ளடக்கத்துடன், பச்சை பீன்ஸ் மற்ற பைட்டோ நியூட்ரியன்களையும் (Phytonutrients) வழங்குகிறது. லுடீன் (Lutein), பீட்டா கரோட்டின் (Beta-carotene), வயலக்ஸாந்தின் (Violaxanthin) மற்றும் நியோக்சாண்டின் (Neoxanthin) போன்ற கரோட்டினாய்டுகளை கொடுப்பதோடு, குவெர்செட்டின் (Quercetin), கேம்ஃபெரோல் (Kaempferol), கேடசின்கள் (Catechins), எபிகாடெச்சின்கள் (Epicatechins) மற்றும் (Procyanidins) போன்ற ஃபிளாவனாய்டுகளும் உள்ளன.

nutrients in beans

இந்த நுண் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நம் உடலின் வளர்சிதை மாற்றத்திற்குள் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு முகவர்களாக செயல்படுகின்றன.

ஆக்ஸிஜனேற்ற சூழலில், பச்சை பீன்ஸ் சமைக்கும்போது உருவாக்கப்படும் சில பெப்டைட் (புரதம் தொடர்பான) கூறுகள் பயனுள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தநாளங்களை வலுப்படுத்தவும், புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடவும் உதவுபவை.

பச்சை பீன்ஸ் வகைகளைப்போலவே ஊதா நிறத்தில் வரக்கூடிய பர்பில் குயின் மற்றும் ராயல்டி பர்பில் போன்ற பீன்ஸ் வகைகளும் அந்தோசயனின் ஃபிளாவனாய்டுகளை வழங்குகின்றன.

அதேபோல, பச்சை பீன்ஸில் நிறைந்துள்ள சிலிகான் என்னும் தாதுப்பொருள் நம் உடலின் எலும்புகள் மற்றும் இணைப்பு திசுக்களின் வலிமைக்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

1 கப் அளவு பச்சை பீன்ஸில் சராசரியாக 7 மில்லி கிராம் அளவில் சிலிக்கான் தாதுப்பெருள் இருக்கிறது. பீன்ஸில் வைட்டமின்கள் ‘பி 2’ மற்றும் வைட்டமின் ‘இ’ மிகுந்துள்ளது.

சிறுவயதிலிருந்தே உணவில் பச்சை பீன்ஸை அடிக்கடி சேர்த்துக் கொள்பவர்களுக்கு, பெண்களாக இருந்தால், மெனோபாஸால் வரக்கூடிய ஆஸ்டியோபோரோஸிஸ் நோய் குறையும்.

ஆண்களுக்கு வயதாவதால் வரக்கூடிய அனைத்து வகையான எலும்பு தேய்மான நோய்களை தவிர்ப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் உள்ள பாலிபினால் எனப்படும் உட்பொருளே இதற்கு மூலகாரணமாகும். பீன்ஸில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்து பட்டியலில் முக்கிய இடம் பிடிப்பவை நார்ச்சத்தும், புரதச்சத்தும் ஆகும்.

cooked beans

கார்போஹைட்ரேட் தொடர்பான வளர்சிதை மாற்றம் மற்றும் ரத்த சர்க்கரை ஒழுங்குமுறை ஆகியவற்றிற்கான ‘பி 1’, ‘பி 2’ மற்றும் ‘பி 3’ போன்ற பி வைட்டமின்கள்; இதய ஆதரவுக்கான பி வைட்டமின்களான ‘பி 6’ மற்றும் ஃபோலேட்.

மேலும் ரத்த சர்க்கரை ஒழுங்கு முறைக்கு உதவும் தாதுப்பொருளான குரோமியம் மற்றும் இதய செயல்பாடுகளுக்கு உதவக்கூடிய தாதுவான மெக்னீசியம் ஆகியவை பீன்ஸில் உள்ளன.

பச்சை பீன்ஸ் ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ALA) உள்ளடக்கத்தை கொண்டுள்ளதன் காரணமாக ஒமேகா -3 இன் நல்ல மூலமாக தகுதி பெறுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் :

ஒரு கப் சமைத்த பச்சை பீன்ஸ் அதிக அளவு ஒமேகா -3 யை கொண்டுள்ளது. ஒமேகா-3 இதயத்தை ஆரோக்கியமாக்கவும், நரம்பு மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தக்கூடியது.

உணவில் பீன்ஸை அடிக்கடி சேர்த்துக் கொள்வதால், வாழ்வியல் முறை நோய்களான உடல்பருமன், நீரிழிவு, ஃபேட்டி லிவர் நோய்களால் வரக்கூடிய அபாயத்தை குறைத்துக் கொள்ள முடியும்.

ஒரு சிலருக்கு அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் ஃபேட்டி லிவர் பிரச்னை வரக்கூடும்.

நாளடைவில் அதுவே கல்லீரல் செயலற்றுப்போகவும் வழி வகுக்கும். இவர்கள் இறைச்சிக்கு பதில் புரதம் நிறைந்த பீன்ஸ் பர்கரை சாப்பிடுவதன் மூலம், உடல் ஆரோக்கியத்தையும், சுற்றுச்சூழலையும் மேம்படுத்த முடியும்.

beans vegetable

நீராவியில் வேகவைத்த பச்சை பீன்ஸ், பித்த அமிலங்களுடன் பிணைப்பதன் மூலம் கொழுப்பைக் குறைக்கும் நன்மைகளை வழங்கக்கூடும் என்றும் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பச்சை பீன்ஸில் உள்ள ரசாயனக் கூறுகள் பித்த அமிலங்களுடன் பிணைக்கப்படும்போது, கல்லீரல் கொழுப்பைத் திரட்டி பித்த அமிலங்களாக உடைக்கிறது.

இதன் விளைவாக, ரத்த ஓட்டத்தில் கொழுப்பின் அளவு குறைகிறது. பீன்ஸ் வேகவைத்த நீரை வடிகட்டி குடிப்பதன் மூலம் உடலில் சேர்ந்துள்ள கொழுப்புக் கட்டிகள் கரைகின்றன.

Related posts