மருத்துவம்

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே முகப்பருக்களை விரட்டலாம் – இயற்கை மருத்துவ குறிப்புகள் இதோ!

சருமத்தின் எண்ணெய் சுரப்பிகளான சவக்கோசு சுரப்பிகள் (sebaceous glands) அதிகமாக எண்ணெய் சுரக்கும் போது இந்த அதிகப்படியான எண்ணெய் இறந்த சரும அணுக்களோடு கலந்து சருமத்தில் உள்ள துளைகளை அடைக்கின்றன. இதன் விளைவாகப் பருக்கள் தோன்றுகின்றன.

பருக்களின் வகைகளில் சில:

வெண்புள்ளிகள் (Whiteheads)

கரும்புள்ளிகள் (Blackheads)

பருக்கள் (Papules)

சீழ் கட்டிகள் அல்லது கொப்புளங்கள் (Pustules)

கணுக்கள் போன்றிருக்கும் கட்டிகள் (Nodules)

pimples on face

நீர்க்கட்டி வகை பருக்கள் (Cystic acne)

இவற்றில் கணுக்கள் போன்றிருக்கும் கட்டிகளும் நீர்க்கட்டிகளும் தீவிர பருக்கள் வகையைச் சேர்ந்தவை.

பருக்களை இயற்கையாகவே குணப்படுத்தும் வழிமுறைகள் சித்த வைத்தியம் மற்றும் நாட்டு மருத்துவ நூல்களில் குறிப்புகளாக எழுதப்பட்டுள்ளன.

இயற்கை முறையில் வீட்டிலேயே பருக்களைப் போக்குவதற்கான வழிகளைப் பார்க்கலாம்:

மஞ்சள் :

மஞ்சளில் antiseptic, antibacterial மற்றும் anti-inflammatory தன்மைகள் உள்ளன. இதனால், மஞ்சள் பருக்கள் மற்றும் பருக்களால் ஏற்படும் தழும்புகளைப் போக்குவதோடு பருக்கள் உருவாகமலும் தடுக்கின்றன.

மஞ்சளுடன் சிறிது தேன் சேர்த்து நன்றாகக் கலந்து முகப்பருவின் மீது தடவி சுமார் 20 நிமிடம் கழித்து கழுவவும்.

ஒரு கைப்பிடி வேப்பிலையை எடுத்து அரைத்து மஞ்சளுடன் கலந்து முகப்பருவின் மீது பூசி, நன்றாகக் காய்ந்த பின் கழுவவும்.

turmeric

 

மஞ்சளுடன் சிறிது கடலை மாவை சேர்த்து முகப்பரு மீது தடவி சுமார் 20 நிமிடம் கழித்து கழுவவும்.
சிறிது மஞ்சள் மற்றும் கத்தாழையை எடுத்து கலந்து முகப்பரு உள்ள இடத்தில் பூசி சுமார் 20 நிமிடம் கழித்து கழுவவும்.

துளசி :

துளசி, antibacterial மற்றும் antifungal தன்மைகள் கொண்டது. இது ஒரு antiseptic ஆகவும் செயல்படுகிறது.

tulsi leaves
Seen in Jaya’s garden

ஒரு கைப்பிடி துளசி இலைகளை நன்றாகக் கழுவி அரைத்துக் கொள்ளவும். சிறிது சந்தனத்தைச் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் பூசி காய விடவும். சுமார் 15 அல்லது 20 நிமிடங்களுக்குப் பிறகு நீரால் முகத்தைக் கழுவவும். தொடர்ந்து செய்து வர முகப்பருக்கள் மறையும்.

தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை துளசித் தேநீர் பருகலாம்.

இஞ்சி :

இஞ்சி collagen உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் சரும நலத்தைப் பாதுகாக்கிறது. மேலும் இஞ்சி சருமத்தின் கழிவுகளை வெளியேற்றுவதன் மூலம் பருக்களைப் போக்கவும் தவிர்க்கவும் உதவுகிறது.

இஞ்சிச் சாறுடன் சிறிது தேன் சேர்த்து பருக்கள் மீது பூசவும். சுமார் 20 நிமிடங்களுக்குப் பின் முகத்தைக் கழுவவும்.

ginger powder

இஞ்சிச் சாறுடன் சிறிது தேன் சேர்த்து கருந் திட்டுக்கள் மீது பூசவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும்.

இஞ்சித் தேநீர் பருகவும்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சையிலிருக்கும் antiseptic, antifungal மற்றும் antibacterial தன்மைகள் கொண்டது. இது பருக்களை உருவாக்கும் bacteria-க்களை அழிக்கிறது. மேலும் இது அதிக எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது.

lemon

எலுமிச்சை சாற்றில் சிறிது பஞ்சை நனைத்து, பருக்களின் மீது பூசவும்.

எலுமிச்சை சாற்றில் சிறிது தேனை சேர்த்து நன்றாகக் கலந்து பருக்கள் மீதி பூசவும். காய்ந்த பின் கழுவவும்.

வேப்பிலை :

வேப்பிலை anti-fungal, antiviral, antiseptic, antibacterial மற்றும் anti-inflammatory தன்மைகள் கொண்டது. வேப்பிலையில் vitamin C இருப்பதால் அது collagen உற்பத்தியைத் தூண்டி சருமத்தைப் பொலிவோடும் இளமையோடும் வைத்திருக்க உதவுகிறது.

கைப்பிடி அளவு வேப்பிலையை நன்றாகக் கழுவி அரை லிட்டர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீரை மூடி ஆற வைக்கவும்.

neem leaves

நீரின் நிறம் மாறியிருப்பதை நீங்கள் பார்க்கலாம். ஆறிய வேப்பிலை நீரை ஒரு புட்டியில் பாதுகாப்பாக வைத்து, தேவைப்படும் அளவு எடுத்து பருக்களின் மீது பஞ்சால் ஒற்றவும்.

வேப்பிலையை சுத்தம் செய்து இரவில் தண்ணீரில் போட்டு மூடி வைக்கவும். காலையிலும் மாலையிலும் வேப்பிலை நீரால் முகத்தைக் கழுவவும்.

பூண்டு :

பூண்டில் இருக்கும் allicin, பருக்களை உருவாக்கும் bacteria-வை அழிக்கிறது. பூண்டு antibacterial, antiviral, antimicrobial மற்றும் antifungal தன்மை கொண்டது.

garlic

வெள்ளைப் பூண்டை அரைத்துப் பருக்களின் மீது பற்றுப் போடவும். உலர்ந்த பின் முகத்தைக் கழுவவும்.

சோற்றுக் கற்றாழை :

சோற்றுக் கற்றாழையில் இருக்கும் antibacterial தன்மைகள் பருக்களை அழிக்கவும் தவிர்க்கவும் உதவும். மேலும் சோற்றுக் கற்றாழை collagen உற்பத்தியைத் தூண்டுவதால், பருக்களின் தடம் விரைவில் மறைந்து சரும நலன் பாதுகாக்கப்படுகிறது.

Aloevera

கற்றாழையைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் பருக்கள் தோன்றுவதைத் தவிர்க்கலாம். பருக்கள் காரணமாக வரும் எரிச்சல், வீக்கம் ஆகியவற்றை இது போக்குகிறது.

Related posts