பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலீஸ் தேதி
சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. இதில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன், கலையரசன், ஹரிகிருஷ்ணன், ஷபீர் ஆகியோர் நடித்துள்ளனர். தென்மா இசையமைத்துள்ள இப்படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நட்சத்திரம் நகர்கிறது படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
#NatchathiramNagargiradhu in theatres from August 31st!@beemji @vigsun @Manojjahson @YaazhiFilms_ @tenmamakesmusic @kishorkumardop @EditorSelva @anthoruban @Jayaraguart @iamSandy_Off @STUNNER_SAM pic.twitter.com/ARSbusJdPP
— Neelam Productions (@officialneelam) August 4, 2022

