அரசியல்சமூகம்

அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம் – ஜெயக்குமார் விமர்சனம் !

ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

கழக நிர்வாகிகள் கூட்டம்

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரது பெயர்கள் இல்லாமல், தலைமை நிலைய செயலாளர் பெயரில் நேற்று கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ‘அதிமுக சட்ட திட்ட விதிகளின் வின்படி ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்புகள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்

ஓபிஎஸ் அறிக்கை

அதன்படி இருவரின் ஒப்புதலை பெற்றுத்தான் கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் கூட்டத்துக்கு எந்தவித ஒப்புதலையும் அளிக்கவில்லை. அதனால் இக்கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால், அது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நிர்வாகத்தில் இருக்கும் கழகத்தையும், தொண்டர்களையும் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது’ என்று ஓ.பன்னீர்செல்வம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பு

இந்நிலையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,`ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது. அதனால் அவைத் தலைவர் தலைமையில் இன்றைய கூட்டம் நடைபெற்றது. 74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர். உடல்நலக்குறைவால் சிலர் முன்அறிவிப்பின் பெயரில் கலந்துகொள்ளவில்லை.

செய்தியாளர்கள் சந்திப்பு

ஓ.பன்னீர்செல்வம் துரோகி

11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு அழைப்பிதழ் அனுப்புவது உள்பட பல முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது’ மேலும், ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், ‘கூட்டத்தை நடத்த தலைமை நிலையச் செயலாளருக்கு அதிகாரமுண்டு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு அடிப்படையே தெரியவில்லை. அதிமுகவுக்கு பல துரோகம் செய்தவர் ஓபிஎஸ். ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளம்’ என்று கூறினார்.

Related posts