இன்று மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
அமைச்சரவை கூட்டம்
கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று மாலை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா பரவல், புதிய தொழில்களுக்கு அனுமதி உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முக்கிய ஆலோசனை
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில், முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ள தடுப்பு பணிகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கே.சந்துரு
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் புதிய சட்ட மசோதாவை சீர்படுத்த ஒப்புதல் வழங்குவதற்கு வாய்ப்புள்ளது. இதற்காக கடந்த 10ஆம் தேதி ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை கண்டறியவும், பாதிப்புகளை ஆராயவும், அவற்றின் விளம்பரங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை கட்டுப்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
தடை சட்டம்
இன்று மாலை 5 மணி மணிக்கு நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில், இந்த குழு ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கவுள்ளனர். இதனையடுத்து இந்தக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்கச் சட்டம் இயற்றுவது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.