இஞ்சி மலைப் பிரதேசங்களில் அதிக மழை அளவு உள்ள இடங்களில் வளர்கிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது.
இஞ்சி வளர்வதற்கு மிதவெப்பமும், அதிககாற்று, ஈரத்தன்மையும் அவசியம். சாதாரணமாக 450 மீட்டர் முதல் 1800 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. வருடம் 150 செ.மீ மழைபொழியும் மலைப்பிரதேசங்களில் இஞ்சி சிறந்து வளர்கிறது.
இஞ்சியிலிருந்து தயார் செய்யப்படும் காம்ஃபின், ஜின்ஜிபெரி, ஃபெளளாட்ரின் ஆகிய மருந்து பொருள்கள் உடலுக்கு தெம்பையும், புத்துணர்ச்சியும் தரக்கூடியவை. இது இஞ்சியிலிருந்துதான் தயார் செய்யப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
இப்போது உலகப் புகழ் பெற்ற டாக்டர்களும், மருத்துவ பல்கலைக்கழகங்களும் இஞ்சியின் மருத்துவத்தைப் பற்றி புரிந்து கொண்டுள்ளன.
நோய்களை குணப்படுத்தும் இஞ்சி :
இஞ்சியின் மருத்துவ குணங்களை அறிந்து தினமும் இஞ்சி சாப்பிட்டால் என்னென்ன நோய் விலகும் என்பதை ஆராய்ந்து நிரூபித்துக் காட்டியுள்ளன.
*நரம்பை பலப்படுத்தும் இஞ்சி
*இதயநோய் வராது
*தலைசுற்றல் வாந்தி மயக்கம் ஏற்படாது
*இதயத்தை பலப்படுத்தும்
*பக்கவாதம், மாரடைப்பு ஏற்பட காரணமான ரத்த கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும்.
வலிப்பு நோயை குணப்படுத்தும் எனப் புகழ் பெற்ற டென்மார்க் ஓடன்ஸ் பல்கலைக்கழகம் சமீபத்தில் தனது ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளது.
சமீபத்தில் இந்த பல்கலைக்கழக மருத்துவமனையில் 35 இதய நோயாளிகளுக்கு சோதனை ரீதியில் இஞ்சி மருந்து தினமும் கொடுக்கப்பட்டது.
மூன்றே மாதத்தில் ஆச்சரியப்படும் வகையில் அந்த நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர்.
காது நோய் ஏற்படாமல் தடுக்க இஞ்சி பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என இந்த பல்கலைக்கழகம் ஏற்கனவே நிரூபித்துள்ளது.
மயக்கம், தலைசுற்றல் நோய்களுக்காக கொடுக்கப்படும் ஆங்கில மருந்து ‘டிரம்மைன்’ ஆகும். இந்த மருந்தைவிட இஞ்சிப் பொடி நல்ல பலனைத் தருகிறது என பிர்காம் பல்கலைக்கழகம் 1982 –ம் ஆண்டில் கண்டுபிடித்தது.
இதயத்துக்கு இஞ்சி நல்லது என ஜப்பான் டாக்டர்கள் ஏற்கனவே கண்டுபிடித்து நிரூபித்துள்ளனர். இதயத்துடிப்பை குறைக்க விலை உயர்ந்த ‘பீட்டா’ ஆங்கில மருந்தை இப்போது பயன்படுத்துகின்றனர். அதைவிட இஞ்சி சிறந்த மருந்தாக உள்ளது.
இரத்தத்தை இதயம் ஒழுங்காக அனுப்ப பயன்படுத்தப்படும் ‘டிஜிடாலிஸ்’ மருந்தை போலவே, இஞ்சியும் இரத்தத்தை ஒழுங்காக இதயத்துக்கு அனுப்புகிறது என்று ஜப்பான் மருத்துவ நிபுணர்கள் சோதனை மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
பக்கவாத நோய் ஏற்பட காரணமாக இருக்கும் இரத்த உறைதலைத் தடுக்க இஞ்சி மருந்தாக உள்ளது என கார்னல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சாதாரண காய்ச்சல் இருந்தாலும், இருமலுக்கும் கூட இஞ்சியை மருந்தாக பயன்படுத்தலாம் என ஜப்பான் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சிபாரிசு செய்துள்ளது.
இவ்வளவு மருத்துவசக்தி வாய்ந்த இஞ்சியைப் பற்றிய அதிசய உண்மைகள் இப்போதுதான் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் திருக்குர்ஆனில் இஞ்சியின் சிறப்பை அன்றே எடுத்துக் கூறி இருப்பதைக் கண்டு நமக்கு அதிசயமாக உள்ளது.
உணவில் நாம் தினமும் இஞ்சியை சேர்த்துக் கொண்டால் எந்த நோயும் அணுகாது. நீண்ட ஆயுள் வாழலாம்.
இஞ்சியை பொடி செய்து, டீ க்கு பதிலாக இஞ்சி டீ கூட குடிக்கலாம் என வெளிநாட்டு டாக்டர்கள் கூறியுள்ளனர். இப்போது இஞ்சியிலிருந்து சாறு, இஞ்சி சர்பத், லேகியம், இஞ்சி தைலம் ஆகிய மருந்துகள் செய்யப்படுகிறது.
பசியை உண்டாக்கும் இஞ்சி சாறு
இஞ்சியை மேல்தோல் நீக்கி அரைத்து, நீர் கலந்து வடிகட்டிப் பயன்படுத்துவதே இஞ்சிசாறு எனப்படும். உணவு செரிமானமில்லாமல் ஏற்படும் வயிற்று போக்கிற்கு இஞ்சி சாற்றை வயிற்றின் தொப்புள் பகுதியை சுற்றி தடவி வர குணமாகும்.
இஞ்சி சாறும், வெங்காய சாறும் சம எடை கலந்து குடித்தால், வாந்தி, குமட்டல் இவைகளை நிறுத்தலாம்.
இருமல் குணமாகும்
இஞ்சி சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் சம அளவு கலந்து வேளைக்கு 30 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால், இருமல் விரைவில் குணமாகும்.
உடல் வலிமைக்கு இஞ்சி தேன் ஒரு காயகற்பம்
இஞ்சியை கீற்றுக்களாக நறுக்கி, தேனில் ஊற வைத்து நாள்தோறும் காலையில் 4 துண்டு மாலை 4 துண்டு உண்டுவர உடல் பலம் பெறும். இளமை தோற்றம் கொடுக்கும்.
வயிற்று வலி, வாந்தி நீங்க இஞ்சி
இஞ்சி சாறு, தேன் இரண்டையும் சேர்த்து பாகு செய்து குங்குமப் பூ, ஏலக்காய், சாதிக்காய், கிராம்பு இவற்றை பொடி செய்து தூவி, கிளறி எடுத்து கண்ணாடி பாத்திரத்தில் வைத்துக் கொண்டு தேவையான போது 5 கிராம் எடுத்து சாப்பிட வயிற்று வலி, வாந்தி முதலியவைகள் குணமடையும்.