சினிமா

கோலாகலமாக தொடங்கியது 75-வது சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழா!

பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் தமிழ் திரையுலக பிரபலங்கள் உட்பட்ட இந்தியாவை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

சர்வதேச திரைப்பட விழா

பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது 75-வது சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழா. உலகம் முழுவதும் இருந்து திரைத்துறையை சேர்ந்த கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். மிகவும் புகழ்பெற்ற இந்த திரைப்பட திருவிழா வரும் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும், இந்த விழாவில் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு அங்கீகரிக்கபடும்.

இந்திய பிரபலங்கள்

இந்நிலையில், இதில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தலைமையில் இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான், கமல் ஹாசன், மாதவன், ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, தமன்னா, பூஜா ஹெக்டே ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மற்றும் விழாவின் நடுவர்களில் ஒருவராக பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே இடம்பெற்றுள்ளார்.

ஏ. ஆர்.ரகுமான் பேச்சு

மேலும், வி.ஆர். தொழில்நுட்பத்தில் ஏ. ஆர்.ரகுமான் இயக்கியுள்ள ‘லீ மாஸ்க்’ படம் திரையிடப்படவுள்ளது. இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏ. ஆர்.ரகுமான் பேசும்போது ‘இங்கே வந்திருப்பது ஒரு பெரிய கவுரவம். மேலும் நான் இயக்கியுள்ள படம் திரையிடப்பட உள்ளது எனவும் நாங்கள் அனைவரும் உற்சாகமாக இருக்கிறோம்’ என்றும் அவர் தெரிவித்தார்.

Kamal Haasan attends 2022 Cannes Film Festival – See Pics

திரையிடப்படும் படங்கள்

இதனையடுத்து நடிகர் பார்த்திபன் இயக்கியுள்ள இரவின் நிழல் படமும், மாதவன் இயக்கியுள்ள ராகெட்ரி படமும் திரையிடப்படவுள்ளது. ஏற்கனவே சென்ற வாரம் பார்த்திபன் ‘தமிழோடு கேன்ஸ் பறக்க தயாராகிறேன்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

நரேந்திர மோடி

மேலும், சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழாவில் கவுரவத்திற்குரிய நாடக இந்தியா பங்கேற்பது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு விழாவும், கேன்ஸ் திரைப்பட விழாவின் 75ம் ஆண்டு விழாவும் ஒருங்கிணையும் தருணத்தில் இந்தியாவின்பங்கேற்பும் அமைந்துள்ளது பெருமிதமாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Related posts