கீர்த்தி சுரேஷ்
2015-ம் ஆண்டு வெளியான ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததின் மூலம் பிரபலமானார். மேலும், இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அவ்வப்போது கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்ற வதந்திகள் வருவது வழக்கம்.
திருமணம்
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேசுக்கு பெற்றோர் மாப்பிள்ளை முடிவாகி விட்டதாகவும், இதற்காகதான் திருநெல்வேலி அருகே உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு கீர்த்தி சுரேஷ் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கீர்த்தி சுரேஷ் தரப்பில் இதை உறுதி செய்யவில்லை.