ஓடிடி ரிலீஸ்
2019-ம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கத்தில் அண்மையில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ‘லவ் டுடே’ இதில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.70 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், ‘லவ் டுடே’ திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Disclaimer: Exchanging phones with your partner might be injurious to your
relationship 💔🥺Love Today is coming to Netflix on the 2nd of December! 💥 pic.twitter.com/wRkQxbQuIf
— Netflix India South (@Netflix_INSouth) November 27, 2022