டிரைலர்
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் அடுத்ததாக ‘பூமர் அங்கிள்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகை ஓவியா கதாநாயகியாக நடிக்க, இயக்குனர் ஸ்வாதீஸ் எம்எஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். முதலில் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்று பெயரிடப்பட்ட இப்படம் சில காரணங்களால் ‘பூமர் அங்கிள்’ என பெயர் மாற்றப்பட்டது. மேலும், தர்மபிரகாஷ் இசையமைக்க, அங்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், ‘பூமர் அங்கிள்’ படத்தின் ட்ரைலரை நடிகர் பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
Happy to share trailer of #Boomeruncle Congrats teamhttps://t.co/UxeHNhnRjQ
@iYogiBabu @OviyaaSweetz @Ankamedia2 @dopkthillai @SubashDhandapa2 @IAmAnbu5 @SDharmaprakash@swadeshh @EditorElayaraja @johnmediamanagr @santhanmusician@bala_vijayTv @thangadurai123 @Mrtmusicoff— PREMGI (@Premgiamaren) November 27, 2022

