Uncategorized

பாபா படத்தின் டப்பிங் பணி : வைரலாகும் புகைப்படம்!

டப்பிங் பணி

அண்ணாமலை, பாட்ஷா படங்களை தொடர்ந்து இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’. இப்படத்திற்கு ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுத, இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். மேலும், இதில் மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடிக்க, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இதனிடையே ‘பாபா’ திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்கில் வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘பாபா’ படத்தின் புதிய காட்சிகளின் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts