சினிமாவெள்ளித்திரை

வாரிசு தெலுங்கில் வெளியாகுமா – தயாரிப்பாளர் தில் ராஜூ விளக்கம்!

வாரிசு வெளியீடு 

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, தில்ராஜு தயாரிக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே பொங்கல் பண்டிகைக்கு நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஐதராபாத்தில் நடைபெற்ற தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து இது குறித்து தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில், வாரிசு திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.

Related posts