Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 5
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»மருத்துவம்»நிலவேம்பு – கல்லீரலை காக்கும் அருமருந்து!

நிலவேம்பு – கல்லீரலை காக்கும் அருமருந்து!

March 3, 20263 Mins Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நிலவேம்பு – இந்த வார்த்தையை கேட்டாலே பலருக்கு நாவில் ஒரு கசப்பு உணர்வு வந்து போகும். குறிப்பாக, கரோனா பெருந்தொற்று காலங்களை அவ்வளவு எளிதில் யாரும் கடந்துவிட முடியாது. அந்த நாட்களில் வீதிக்கு வீதி வழங்கப்பட்ட ‘நிலவேம்பு குடிநீர்’ பலருடைய கசப்பான, ஆனால் ஆரோக்கியமான நினைவலைகளில் ஒன்று.

“அந்த கசப்பான கசாயமா?” என்று இப்போதும் முகம் சுளிப்பவர்கள் உண்டு. ஆனால், அந்த அதீத கசப்புக்கு பின்னால் ஒளிந்திருக்கும் மருத்துவக் குணங்கள், குறிப்பாக நம் கல்லீரலை இது எப்படிப் பாதுகாக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை.

நம் முன்னோர்கள் காய்ச்சல் வந்தாலோ அல்லது செரிமான கோளாறு ஏற்பட்டாலோ சட்டென்று நாடிய இந்த மூலிகை, இன்று நவீன அறிவியலாலும் ஒரு சிறந்த ‘கல்லீரல் காவலனாக’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வெறும் காய்ச்சல் மருந்தாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலவேம்பு, உண்மையில் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கல்லீரல் ஆரோக்கியத்தில் எப்படி உதவுகிறது? நமது உடல் ஆரோக்கியத்தில் கல்லீரல் ஒரு முக்கியமான வடிகட்டியாக செயல்படுகிறது. நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று மற்றும் பயன்படுத்தும் மருந்துகள் வழியாக உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றுவது கல்லீரலின் வேலை.

நிலவேம்பு, இந்த நச்சு நீக்கச் செயல்பாட்டை இன்னும் திறம்படச் செய்ய உதவுகிறது. நவீன வாழ்க்கை முறையில் நாம் உட்கொள்ளும் தேவையற்ற நச்சுகளால் கல்லீரலுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்க இது பெரிதும் துணைபுரிகிறது. குறிப்பாக, கல்லீரல் வீக்கம் (Hepatitis) போன்ற பாதிப்புகளுக்கு நிலவேம்பு ஒரு சிறந்த மருந்தாகச் செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க :  2-வது நாளாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு - மத்திய சுகாதாரத்துறை தகவல்!

அடுத்ததாக, நிலவேம்பில் உள்ள ‘ஆண்ட்ரோகிராஃபோலைடு’ (Andrographolide) போன்ற வேதிப்பொருகள் கல்லீரல் செல்களைப் பாதுகாக்கும் ஒரு கவசமாக செயல்படுகின்றன. மது அருந்துதல், அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்வதால் கல்லீரல் செல்கள் சேதமடைய வாய்ப்புள்ளது.

நிலவேம்பு சாறு இத்தகைய சேதங்களிலிருந்து செல்களைக் காப்பதுடன், கல்லீரலில் ஏற்படும் அழற்சி அல்லது வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது என்கிறது Sciencedirect ஆய்வுதளத்தில் வெளியான ஆய்வு. இது கல்லீரல் பழுதாவதைத் தடுக்கும் ஒரு இயற்கை அரணாக அமைகிறது. செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கும் நிலவேம்பு மிக அவசியம். இது கல்லீரலில் இருந்து பித்தநீர் சுரப்பை தூண்டுகிறது.

பித்தநீர் சரியாகச் சுரந்தால் மட்டுமே நம் உடலில் உள்ள கொழுப்புகள் எளிதாக உடைக்கப்பட்டு, செரிமானம் தடையின்றி நடைபெறும். பித்தநீர் ஓட்டம் சீராக இருக்கும்போது ஒட்டுமொத்த செரிமான மண்டலமும் புத்துயிர் பெறுகிறது. பல நேரங்களில் நமக்கு ஏற்படும் செரிமானக் கோளாறுகளுக்கு அடிப்படைத் தீர்வாக நிலவேம்பு அமைகிறது.

இறுதியாக, நிலவேம்பு உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. உடலில் தேவையற்ற செல்கள் சிதைவடையும் போது ஏற்படும் இந்த அழுத்தம், கல்லீரல் செல்களை அதிகப்படியான வேலை செய்யத் தூண்டி அவற்றைச் சோர்வடையச் செய்யும். நிலவேம்பில் உள்ள இயற்கை நுண் சத்துக்கள் இந்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, கல்லீரல் செல்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாகச் செயல்பட உதவுகின்றன. இது இயற்கை வழங்கிய ஒரு சிறந்த ‘ஆன்டி-ஆக்ஸிடன்ட்’ மூலிகையாகும்.

எவ்வளவு பயன்படுத்தலாம்? நிலவேம்பு சந்தையில் பல வடிவங்களில் கிடைக்கிறது. இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பொடி, மாத்திரைகள் அல்லது நிலவேம்பு டீ எனப் பல வகைகளில் இதைப் பயன்படுத்தலாம்.

இதையும் படிக்க :  ரஷ்யாவில் 10 குழந்தைகள் பெற்று கொண்டால் ரொக்கப்பரிசு !

இருப்பினும், ஒரு மூலிகை இயற்கையானது என்பதாலேயே அது அனைவருக்கும் பாதுகாப்பானது என்று கூறிவிட முடியாது என்கிறது ஆய்வுகள். ஒவ்வொருவருடைய உடல்நிலை, அவர்கள் செய்யும் வேலை, அன்றாட உணவுப் பழக்கம் மற்றும் உடல் உழைப்பு ஆகியவற்றை பொறுத்து நிலவேம்பு வேலை செய்யும் விதம் மாறுபடும் என்கிறது Quest Journals தளத்தில் வெளியான ஆய்வு.

நிலவேம்பின் தரமும், அது உடலில் எந்த அளவு உறிஞ்சப்படுகிறது என்பதும் மிக முக்கியம். எனவே, ஒரு ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி உங்களுக்கேற்ற அளவைத் தீர்மானிப்பதே சிறந்தது. சுயமாக மருந்துக் கடைகளில் வாங்கித் தொடர்ந்து பயன்படுத்துவது சில நேரங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். குறிப்பாக, ஏற்கனவே வேறு நோய்களுக்கு மருந்து எடுப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

பக்கவிளைவுகள் என்னென்ன?: எந்த ஒரு இயற்கை மருத்துவத்திலும் சில பக்கவிளைவுகள் இருக்கவே செய்கின்றன. நிலவேம்பை தவறான அளவிலோ அல்லது நீண்ட காலமோ பயன்படுத்தும்போது குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றில் அசௌகரியம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். ஒரு சிலருக்குத் தோல் அரிப்பு அல்லது தடிப்புகள் போன்ற ஒவ்வாமை எதிர்வினைகளும் உண்டாக வாய்ப்புள்ளது.

மிக முக்கியமாக, நிலவேம்பு கல்லீரலில் மருந்துகள் வளர்சிதை மாற்றம் அடையும் முறையை மாற்றியமைக்கக்கூடும். இதனால் நீங்கள் ஏற்கனவே எடுத்துக்கொள்ளும் மற்ற மருந்துகளின் வீரியம் கூடலாம் அல்லது குறையலாம்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமாதவிடாய்: முதல் நாளில் வலி அதிகமாக இருப்பது ஏன்? சமாளிக்க என்ன செய்வது?
Next Article தமிழகத்தை தலைகுனிய வைத்த திமுக அரசு! நயினார் நாகேந்திரன் தாக்கு

Related Posts

மருத்துவம்

“புரத உட்கொள்ளலை குறைப்பது கல்லீரல் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கலாம்” – யாருக்கெல்லாம் பொருந்தும்?

March 24, 2026
உணவு

60 நாட்கள் ‘ஜங்க் ஃபுட்’ சாப்பிடாமல் இருந்தால் இத்தனை நன்மைகளா? ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்களேன்!

March 24, 2026
மருத்துவம்

முதுகு வலிக்கு காரணமாகும் வைட்டமின் டி குறைபாடு – தடுப்பது எப்படி?

March 24, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.