தமிழகத்தையே தலைகுனிய வைத்த திமுக அரசு என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு வருமாறு-
கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக நிர்வாகியின் பாலியல் இச்சைக்கு இரண்டு வயது மழலை பலியான பெருந்துயரத்தின் சுவடு மறையும் முன்னரே, சென்னையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் இருந்த பணிப் பெண்ணிடம், திமுக கவுன்சிலர் பிரபாகரன் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.
பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக மட்டுமே பார்க்கும் ஒரு கேவலமான மனநிலை திமுகவினருக்கு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. தமிழகப் பெண்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டிலுள்ள எந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கும் உடன்பிறப்புகளைத் ஸ்டாலின்
அவர்கள் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது ஏன்?
அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு, பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி, மாணவர்களின் எதிர்காலம் சிதைவு எனத் தொடர் நிர்வாகத் தோல்விகளால் தமிழக மக்களையே தினந்தினம் ஆட்டிப்படைக்கும் “திராவிட மாடல்” தமிழக வரலாற்றின் அவமான அடையாளம்!
இவ்வாறு அந்த பதிவில் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

