அரசியல்தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு நிலத்தில் கருணாநிதி சிலை அமைக்கும் ஏ. வ வேலு – தடை விதித்து ஐகோர்ட் அதிரடி உத்தரவு !

மறைந்த முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணிக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிலை அமைக்கும் பணி

திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும் மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முன்னால் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்கின்றனர்.அந்த சிலை அமைக்கும் பணிகளை அமைச்சர் ஏ.வ வேலு மேறிக்கொண்டு வருகிறார். இதனை எதிர்த்து திருவண்ணாமலையை சேர்ந்த ஜி கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆக்கிரமிப்பு நிலம்

அந்த மனுவில் வேங்கைக்கால் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கி அருகே உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சிலை அமைக்கப்படுவதாக கூறியுள்ளார்.

கிரிவல பாதையில் சிலை அமைப்பதால் கிரிவலம் வரும் லட்சகணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அப்பகுதியில் கால்வாய்கள் அமைந்திருப்பதால் அங்கு சிலை அமைத்தால் அது  நீர் போக்குவரத்து பாதிக்கும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அரசு தரப்பு வாதம்

அமைச்சர் ஏ.வ. வேலு மகன் நிர்வாகிக்கும் ஜீவா கல்வி அறக்கட்டளைக்கு இடம் முறைகேடாக விற்கப்பட்டதாகவும் முறைகேடாக பட்டா வழங்கிய வருவாய் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் குற்றசாட்டிருந்தார்.

இந்த வழக்கில் ஏ.வ. வேலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜேந்திரன் என்பவரிடமிருந்து வாங்கிய நிலத்திற்கு பட்டா உள்ளது என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிறரின் தூண்டுதலின் பேரில் தொடரப்பட்ட வழக்கு என்பதால் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதிட்டார். அரசு தரப்பில் இது தனியாருக்கு சொந்தமான நிலம் என்றும் வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, வழக்கை விசாரித்த சென்னை உயர்நிதிமன்றம் சம்பந்தப்பட்ட இடத்தையும், ஆவணங்களையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று திருவண்ணாமலை ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயர்நீதிமன்றம்

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன் மற்றும் ஜெ சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் மாவட்ட வருவாய் துறை, கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோர்களின் அறிக்கை பெற வேண்டியுள்ளதாலும், ஆக்கிரமிப்பு புகார் குறித்து புதிய தகவல்களை பெற வேண்டியுள்ளதாலும் அவகாசம் வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலை அமைக்க தடை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் இந்த மனு குறித்து அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆதாரங்களை சேகரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

அதுவரை குறிப்பிடபட்ட இடத்தில் சிலை அமைக்க தடை விதிப்பதாக உத்தரவிட்டனர். இதனால் திருவண்ணாமலையில் மறைந்த முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related posts