சுற்றுசூழல்தமிழ்நாடுமருத்துவம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா; மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை தியாகராயா நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றளவும் போராட்டம்

கடந்த இரண்டரை வருடங்களாக கொரோனா பெருந்தொற்று உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பெருந்தொற்று 2019ம் ஆண்டு முதன்முதலாக சீனாவின் ஊஹான் மாநகரத்தில் இருந்து பரவ தொடங்கியது. 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் மற்ற உலக நாடுகளுக்கும் கொரோனா பெருந்தொற்று பரவியது. ஊரடங்கு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற விதிகளை கடைபிடிப்பதன் மூலம் இன்றளவும் உலக மக்கள் அனைவரும் கொரோனா பெருந்தொற்றுடன் போராடி வருகின்றனர்.

Corona Virusஅதிகரிக்க தொடங்கியுள்ளது

சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுகாதார மேம்பாடு மற்றும் கொரோனா விழிப்புணர்வு காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்ததை அடுத்து தற்போது, மீண்டும் ஒரு சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா பெருந்தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளதாக 2 தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

6 பேருக்கு கொரோனா

தமிழகம் முழுவதும் 542 பேர் கொரோனாவால் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தற்போது, சென்னை தியாகராயா சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் குடியிருக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Wear mask

சமூக பரவல்

நோய்த்தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ‘கொரோனா பரவல் என்பது சமூக பரவலாக மாறியதால் தினசரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அதை சமாளித்து வாழ பழகிக்கொள்ள வேண்டுமே தவிர, கொரோனா முற்றிலும் ஒழிந்துவிட்டது என எண்ணக்கூடாது.

உறுதி செய்ய வேண்டும்

மக்கள் தன்னொழுக்கத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்ற கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பன்றுவதில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும், மொத்த பரிசோதனையின் முடிவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தை தாண்டும் பட்சத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

Radhakrishnan

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 100-ஐ எட்டியுள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்களில், குறிப்பாக வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்’ என அக்கடிதத்தில் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts