Editor's PicksSpecial Storiesஉலகம்சமூகம்தொழில்நுட்பம்

தொழில்நுட்பம் – நண்பனா ? எதிரியா ?

உடுத்தும் உடை, உணவு, இருப்பிடம் வரிசையில் தொழில்நுட்பமும் மனிதர்களின் அத்தியாவசியம் ஆகிப்போன காலகட்டத்தில் தற்போது வாழ்ந்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காற்றின் வேகத்தை விட அதிகமாகிவிட்டது.

தொழில்நுட்பம்

அதின் விளைவாக இன்று ஐந்து வயது குழந்தைகளிடம் கூட ஸ்மார்ட் போன்களை பார்க்கமுடிகிறது. இது இளையதலைமுறைகளின் வளர்ச்சி என்றாலும் கூட ஒரு பக்கம் இதற்கான பக்க விளைவுகளும் இல்லாமல் இல்லை. இதனால் இந்த தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி மனிதர்களுக்கு நண்பனா? எதிரியா ? என்ற கேள்விகளும் எழ தான் செய்கிறது.

 technology

ஸ்மார்ட் போன்

இன்றைய நவீன வாழ்க்கையில் மொபைல் போன் பேசுவதை தாண்டி வாட்ஸஅப், வங்கிப் பணம் பரிவர்த்தனை வரை எல்லாவற்றிக்கும் இந்த ஸ்மார்ட் போன் உபயோகப்படுகிறது. கடல் கடந்து வேறொருவரிடம் பேசவும், உலகில் எந்த மூளையில் இருபவர்களிடமும் ஒரு செய்தியை எளிதாக கொண்டு சேர்க்கவும் இந்த ஸ்மார்ட் போன் பெரிதளவில் உதவுகிறது. மனிதர்களை நாடு, மொழி, இன பேதமின்றி இணைக்கும் முயற்சியே இந்த ஸ்மார்ட் போன். ஆனால் இந்த ஸ்மார்ட் போன்களால் அருகில் இருக்கும் மனிதர்களிடம் இருந்து கூட தனிமைப்படுத்தி வாழ்கிறோம்.

சோஷியல் ஐசோலேஷன்

சோஷியல் ஐசோலேஷன் என்பது சமூக ரீதியாக நம்மை தனிமைப்படுத்திக் கொள்வது. இன்று அனைவரும் காதுகளில் ஹெட்போன்களை மாட்டி கொண்டு வேறொரு உலகத்திற்குள் நுழைந்து விடுகிறோம். இதனால் நம் நடைமுறை மற்றவர்களுடன் பேசுவது குறைந்து விட்டது. உடலுக்கு எந்த வேலையையும் கொடுக்காமல் அதிகநேரம் வீடியோ கேம்ஸ் விளையாடுவது, சமூகவலைத்தளம் பயன்படுத்துவது என்று நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது உடல் இடையை அதிகமாக்க செய்கிறது.

Smartphones

மன அழுத்தம்

முழுக்க முழுக்க தொழில்நுட்பங்களுடன் தொடர்பில் இருப்பதால் மனிதர்களுடனான தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்படுகின்றது. இதனால் மனிதர்களிடம் உரையாடல் இல்லாமல் போகிறது. இது ஒருவித மன அழுத்ததை தருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், இதனால் தூக்கமின்மையோ, தேவைக்கு குறைவான தூக்கமோ ஏற்படுகிறது.

மோசடி

இதேவேளையில் தொழில்நுட்பங்கள் வாயிலாக சில மோசடி வேலைகளும், தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்துவதும் இங்கு அரங்கேறிகொண்டு தான் இருக்கிறது. இதுபோன்ற சில விஷயங்களில் தொழில்நுட்பம் மனிதர்களுக்கு எதிரியாகவும் அமைகிறது. இருப்பினும் தொழில்நுட்பம் நண்பனா ? எதிரியா ? என்பது அதை பயன்படுத்தும் நாமே தீர்மானிக்கிறோம்.

Related posts