எட்டு வடிவ நடைப்பயிற்சியை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.நடைப்பயிற்சியினால் பல்வேறு நன்மைகள் உண்டு என்றாலும், எட்டு வடிவ நடைப்பயிற்சியைப் பயில்வதால் மேலும் கூடுதலான பலன்கள் கிடைக்கும்.
எட்டு வடிவ நடைப்பயிற்சி :
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் சித்தர்கள் அருளிச் சென்ற பல்லாயிரக்கணக்கான மருத்துவ முறைகளில் எட்டு வடிவ நடைப்பயிற்சியும் ஒன்று. இதையே ஆங்கிலத்தில் Infinity Walking என்று அழைக்கிறார்கள்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் எட்டு வடிவத்தில் நடப்பதுதான் எட்டு வடிவ நடைப்பயிற்சி.
பலன்கள் :
எட்டு வடிவ நடைப்பயிற்சியால் ஏற்படும் நன்மைகளில் சில:
வெறும் கால்களின் நடப்பதால் பாதங்களில் உள்ள வர்மப் புள்ளிகள் தூண்டப் பெற்று உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடு மேம்படுத்தப்படுகிறது.
சளியைப் போக்குகிறது.
ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளை சரி செய்கிறது.
நுரையீரல் நலத்தைப் பாதுகாக்கிறது.
இருதய நலனைப் பாதுகாக்கிறது.
உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது.
செரிமான மண்டலத்தின் இயக்கத்தை சீர் செய்கிறது.
மலச்சிக்கலைப் போக்குகிறது.
இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகிறது.
இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது.
ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலி பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
மூளைத் திறனை மேம்படுத்துகிறது.
கண் பார்வையைக் கூர்மையாக்குகிறது.
காது கேட்கும் திறனை அதிகப்படுத்துகிறது.
அதிக உடல் எடையைக் குறைக்கிறது.
தைராய்டு பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.
தலைமுதல் குதிகால் வரை உடல் முழுவதிலும் வலியைப் போக்குகிறது.
மூட்டுகளைப் பலப்படுத்துகிறது; மூட்டுப் பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.
பாத வெடிப்பைப் போக்குகிறது.
பித்தப்பை மற்றும் சிறுநீரகத்திலுள்ள கற்களைக் கரைக்கிறது.
சிறுநீரகக் கோளாறுகளைக் குணமாக்குகிறது.
தூக்கமின்மையைப் போக்குகிறது.
இளமையான தோற்றத்தைத் தருகிறது.
மன அழுத்தத்தைப் போக்குகிறது; மனதில் அமைதியை ஏற்படுத்துகிறது.
குறிப்பு :
கர்ப்பிணிப் பெண்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் எட்டு வடிவ நடைப்பயிற்சியைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.