ஆன்மீகம்

வீட்டில் தங்கம் அதிகரிக்க ஆன்மீகம் சொல்லும் வழிமுறைகள்!

ஒருவரது வீட்டில் தங்கம் சேருவதற்கு ஆன்மீக ரீதியாக சில வழி முறைகள் உள்ளன. அதை சரியாக கடைபிடித்தால் வீட்டில் நிச்சயம் தங்கம் அதிகரிக்கும். வாருங்கள் இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

பொதுவாக பெரும்பாலானோர் அட்சய திருதி அன்று தங்கம் வாங்குவது வழக்கம்.

அதை தவிர்த்து மற்ற நாட்களில் தங்கம் வாங்க நினைப்பவர்கள் பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரம் வரும் புதன், வெள்ளி கிழமைகளில் தங்கம் வாங்கினால் அதிஷ்டம் வந்து சேரும்.

gold coins

புதிதாக தங்கம் வாங்கியதும் அதை ஒரு சுத்தமான வெள்ளை துணியிலோ அல்லது வெள்ளை காகிதத்திலோ சுற்றி உப்பில் சிறிது நேரம் புதைத்து வைத்தால் தங்கத்தில் உள்ள தோஷங்கள் அனைத்தும் விலகும். இதனால் வீட்டில் தங்கம் பெருகும்.

சனிக்கிழமை, ரோகிணி நட்சத்திரம், அமிர்தயோகம் மூன்றும் சேர்ந்து வரும் நாளை தங்க கணபதி தினமாக அனுஷ்டித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

gold in our home

 

இந்த நாளில் காலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டிலோ அல்லது கோவிலிலோ கணபதி முன்பு ‘ஓம் தங்க கணபதி வஸ்ய வஸ்ய நம’ என 108 முறை பாராயணம் செய்துவிட்டு தங்கம் வாங்கினால் தங்கம் பெருகும். அதோடு இதை செய்வதால் சகலமும் குடி வரும்.

லக்கினத்தில் குரு,10 ல் சந்திரன், 11ல் புதன் போன்ற நிலைகள் இருக்கும் காலகட்டத்தில் தங்கம் வாங்கினாலும் வீட்டில் தங்கம் அதிகரிக்கும்.

Related posts