Editor's Picksஃபிட்னஸ்உணவு

இந்திய உணவின் அற்புதங்கள்!

மனித இனம் நிலைத்திருக்க மிகவும் அவசியமானது மனித உடல். ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த பல்வேறு உடல் கூற்று கட்டமைப்புக்களால் உருவாக்கப்பட்டது தான் மனித உடல். ஒரு மனிதன் நீண்ட ஆயுளைப் பெற்று இவ்வுலகில் வாழ வேண்டும் என்றால் மனித உடல் சீராக செயற்படுதல் வேண்டும்.

நோய்

இந்த நவீன உலகில் வாழ்கின்ற மக்களில் 75 சதவீதமானோர் ஏதேனும் ஒரு நோயால் அவதிப்படுவோராக தான் இருக்கிறார்கள். உடலின் புற ஆரோக்கியமானது, நவீன உலகின் முறையற்ற உணவுப் பழக்கவழக்கத்தாலும் பாதிப்படைகின்றது.

இந்திய உணவுகள்

இந்திய உணவுமுறை பல்வேறு சுவைகளையும், வண்ணங்களையும் கொண்டதாக இருக்கிறது. மேலும், இந்திய உணவில் கீரை, கத்தரிக்காய் மற்றும் மாம்பழம் போன்ற பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்க்கப்படுகின்றன.

காய்கறிகள், பழங்கள்
காய்கறிகள், பழங்கள்
உடல் எடையை குறைக்க

இந்திய உணவில் பயன்படுத்தப்படும் கொழுப்பின் அளவு அடிக்கடி அதிகமாகி, உங்கள் எடை குறைக்கும் முயற்சியை தடுக்கலாம். நீங்கள் ஒல்லியாக இருக்க விரும்பினால் குறிப்பாக எண்ணெயில் வறுத்த உணவு, எண்ணெய் உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கட்டாயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் காய்கறிகள் மற்றும் மாமிசங்களை குறைந்தபட்ச எண்ணெயில் சமைத்து சாப்பிட வேண்டும்.

காய்கறிகள் அவசியம்

உங்கள் உணவில் காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மாவுச்சத்துள்ள காய்கறிகளை விட பச்சை காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நன்றாக வேகவைத்து சமைக்கப்படும் காய்கறிகள், உடல் எடை குறைக்க உதவும். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கவும், உடல் எடையை குறைக்கவும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிக முக்கியம்.

 Fitness Training - Tips
Fitness Training – Tips
நீர் அவசியம்

சரியான உடல் ஆரோக்கியத்திற்கு நீர் அவசியம். வழக்கமாக ஒரு மனிதன் சராசரியாக தினசரி 1.5 லிட்டர் தண்ணீரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீரேற்றமாக இருக்க, ஒவ்வொரு உணவு மற்றும் சிற்றுண்டிக்கும் முன்பும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். உங்கள் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்துகொள்வது அவசியம். ஏனெனில் அவை இயற்கையாகவே தண்ணீரைக் கொண்டிருக்கும்.

இப்படி அன்றாட உணவுமுறையில் காய்கறிகளையும், நீரையும் சரியாக சேர்த்துகொண்டாலே நம் உடல் எடைகள் குறைந்து ஆரோக்கியமாக வாழ முடியும்.

 

Related posts