நயன்தாரா தனது திருமண விழா உரிமையை தனியார் டிஜிட்டல் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளதால் திரை நட்சத்திரங்கள் திருமண விழாவிற்கு செல்லலாமா என்ற யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணம்
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் வரும் 9ம் தேதி அன்று மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது. இதில் சுமார் 200 திரை பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
முக்கியமாக நடிகர் ரஜினிகாந்த், இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொள்வார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி நெட்பிலிஸ் நிறுவனத்திற்கு திருமண விழா உரிமையை விற்பனை செய்துள்ளனர். இதனால் அந்த நிறுவனம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறது.
நெட்பிலிஸ் டிஜிட்டல்
குறிப்பாக திருமண விழாவிற்கு வருபவர்கள் புகைப்படம் எடுக்கக்கூடாது. தொலைபேசியை திருமண அரங்கத்திற்குள் எடுத்து வரகூடாது என கூறியுள்ளனர். திருமண விழா உரிமை பெற்றிருப்பதால் எந்த ஒரு புகைப்படதையோ காணொளி காட்சிகளையோ வெளியிடக்கூடாது என நெட்பிலிஸ் நிறுவனம் உறுதியாக இருக்கின்றனர்.
இது ஒரு புறமிருக்க திருமண விழா உரிமையை விற்பனை செய்திருப்பதால் சில நட்சத்திரங்கள் நாம் திருமணத்திற்கு செல்லலாமா அல்லது வேண்டாமா என்ற யோசனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் முன்னதாக சினேகா – பிரசன்னா திருமண விழாவை ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு விற்பனை செய்திருந்தனர். அதன் காரணமாக பல முன்னணி நட்சத்திரங்கள் அந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை என கூறப்பட்டது.
நம்பிக்கை
இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண உரிமை விற்பனை செய்யப்பட்டு இருப்பதால் முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்வார்களா என்ற கேள்வி இருப்பதாக திரைத்துறைவட்டாரத்தில் எழுந்துள்ளது. இருந்தாலும் நட்சத்திர ஜோடிகள் இருவரும் தங்களுடைய நண்பர்கள் நிச்சயம் திருமணத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கின்றனர்.