இந்தியாசமூகம்சினிமா

பிரித்விராஜ் பட தலைப்புக்கு கிளம்பிய எதிர்ப்பு!

பட தலைப்பு

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரித்விராஜ். இவர் அல்போன்ஸ் புத்தரன் இயக்கதில் சமீபத்தில் வெளியான ‘கோல்ட்’ படத்தில் நடித்திருந்தார். மேலும், மொழி, அபியும் நானும், கவியத் தலைவன் போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது ‘ஜெய ஜெய ஜெய ஹே’படத்தை இயக்கிய விபின் தாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு ‘குருவாயூர் அம்பல நடையில்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு

இந்நிலையில், இப்படத்தின் தலைப்புக்கு கேரள இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும், சிலர் நடிகர் பிரித்விராஜுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts