சினிமாவெள்ளித்திரை

‘பிச்சைக்காரன் -2′ படப்பிடிப்பில் பரபரப்பு : படக்குழுவினர் கைது!

பிச்சைக்காரன் -2

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. இயக்குனர் சசி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடயே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் விஜய் ஆண்டனிகக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதனால் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே இயக்கி, நடித்து வருகிறார். ‘பிச்சைக்காரன் -2 படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

கைது நடவடிக்கை

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தில் முறையான அனுமதியின்றி ட்ரோன் மூலம் படப்பிடிப்பு நடத்தியதாக கூறி ‘பிச்சைக்காரன் -2’ படக்குழுவினர் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களை ஜாமீனில் விடுவித்தாக கூறப்படுகிறது.

Related posts