சினிமாதமிழ்நாடு

மாற்றுத் திறனாளியுடன் விஜய் : வைரலாகும் புகைப்படம்!

விஜய் மக்கள் மன்றம்

இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. தில்ராஜு தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மாதம் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்தித்தார். முதல்கட்டமாக நடைபெற்ற இந்த சந்திப்பில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக இன்று செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்துள்ளார். இவர்களுக்கு மட்டன் பிரியாணி மதிய உணவாக வழங்கப்பட்டுள்ளது. அப்போது மாற்றுத் திறனாளி ரசிகர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts