கோடி கணக்கில் சம்பளம் வாங்கிய நெட்பிளிக்ஸ் ஊழியர் ஒருவர் வேலை சலிப்படைந்து விட்டதாக தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
வேலை வாய்ப்பு
இன்றைய காலகட்டத்தில் வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பாகிவிட்டது. பல பட்டதாரிகள் தங்களது படிப்பிற்கும், திறமைக்கும் ஏற்ற வேலை கிடைக்காமல் அல்லாடி வருகிறார்கள். குறிப்பாக பொறியில் படித்தவர்கள் வேலை கிடைக்காமல் பல்வேறு துறைகளில் வேலை செய்ய தொடங்கி விட்டனர். மேலும், 2020ம் ஆண்டு வந்த கொரோனா பெருந்தொற்றால் பலரும் தங்களது வேலையை இழந்தனர்.
இயல்பு நிலை
இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இருப்பினும் முழுமையாக வேலை வாய்ப்புகள் இல்லாமல் இளைஞர்கள் கிடைத்த வேலைக்கு தான் சென்று வருகிறார்கள். ஆனால் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது.
கோடிகளில் சம்பளம்
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த மைக்கேல் லின் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் நெட்பிளிக்ஸில் மூத்த சாஃப்ட்வேர் இன்ஞ்சினியராக பணியாற்றி வந்துள்ளார். 4.50 லட்சம் டாலர் ஆண்டு வருமானமாக பெற்று வந்தார். அதாவது இந்திய மதிப்பின்படி சுமார் 3.5 கோடி. இந்த வருமானத்தை விட்டுவிட்டு தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார் மைக்கேல் லின்.
ராஜினாமா
இது குறித்து மைக்கேல் லின் பேசும்போது, ‘தனக்கு நெட்பிளிக்ஸ் வேலையில் இலவசமாக உணவு, அதிகளவிலான சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்று அனைத்து வசதிகளும் கிடைத்தது. இருப்பினும் எனக்கு இந்த வேலை சலிப்படைந்து விட்டதால் நான் வேலையை விட்டு நின்றுவிட்டேன் என்று கூறியிருக்கிறார்’. ஆனால் இவரது இந்த முடிவிற்கு இவரது பெற்றோருக்கு கூட மகிழ்ச்சி இல்லையாம்.
நெட்பிளிக்ஸ் வேலை
கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்து வேலை செய்த போது கொஞ்சம் கொஞ்சமாக வேலையில் சலிப்படையத் தொடங்கியது. ஆரம்பத்தில் இந்த பணியில் தான் நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனாவிற்கு பின் புதிதாக எதையும் கற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் தான் இந்த முடிவை எடுத்ததாக மைக்கேல் லின் தெரிவித்துள்ளார்.
உலகில் முன்னணி நிறுவனமான நெட்பிளிக்ஸ் வேலையை விட்டதற்காக அவரை முட்டாள் என்று திட்டி பலரும் சமூகவளைதலத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.