மருத்துவம்

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆயில் புல்லிங் பற்றித் தெரியுமா?!

நல்லெண்ணையினால் தினந்தோறும் வாய் கொப்பளிப்பதால் ஆயிரக்கணக்கான நோய்கள் தீரும் என சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலத்தில் இந்த மருத்துவ முறை ஆயில் புல்லிங் என அழைக்கப்படுகிறது. ஆயில் புல்லிங்கினால் கிடைக்கக் கூடிய மருத்துவ பலன்கள் குறித்து இங்கு பார்க்கலாம்!

ஆயில் புல்லிங் செய்வது எப்படி?

தினந்தோறும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணையை வாயில் ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் வரை கொப்பளிப்பது ஆயில் புல்லிங் என அழைக்கப்படுகிறது.

oil pulling

இதனை தொடர்ந்து ஒரு மண்டலம் செய்து வந்தால், உடல் நிலையில் முன்னேற்றத்தை உணர முடியும்.

மைக்ரேன் குணமாக :

சிலருக்கு மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி மிகப்பெரிய தொல்லையாக இருக்கும். இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயில் புல்லிங் ஒரு சிறந்த மருந்து.

உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதில் ஆயில் புல்லிங் முக்கிய பங்கு வகிக்கிறது.

benefits of oil pulling

ஆயில் புல்லிங் செய்வதால், உங்கள் வாய் சுத்தமாகிறது. குறிப்பாக வாய் துர்நாற்றம் அகலும். மேலும் பற்கள் வெண்மையாகும். ஈறுகள் வலுவாகும்.

உடல் சூடு குறையும் :

பித்த உடம்புக்காரர்கள் உடற் சூட்டால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள். இவர்கள் தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், உடல் குளிர்ச்சியாக இருக்கும். பித்தம் கட்டுக்குள் வரும்.

ஆயில் புல்லிங் செய்வதால் உடல் எப்போதும் உற்சாகம் இருக்கும். இதனால் பகல் வேளைகளில் நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவதால், இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

கண்பார்வை சீராக :

நல்லெண்ணெயில் உள்ள குளிர்ச்சித் தன்மை, கண்களில் உள்ள நரம்புகளுக்கு நன்மை செய்கிறது. எனவே தினசரி ஆயில் புல்லிங் செய்வதால், பார்வைக் கோளாறுகளை சரி செய்ய முடியும்.

oil pulling for good health

இது மட்டுமல்லாமல் வறட்டு இருமல், ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள், சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் ஆயில் புல்லிங் தீர்வளிக்கிறது.

குறிப்பு :

ஆயில் புல்லிங் செய்தவுடன் காலை உணவை அருந்தக் கூடாது. அதே போல் இதனை குறைந்தது ஒரு மாதம் விடாமல் செய்தால் மட்டுமே, மேற்கூறிய பலன்களை பெற முடியும்.

Related posts