சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடு

திருப்பூர் : கடன் சுமையால் கூலி தொழிலாளி தற்கொலை !

கடன் சுமையால் கூலி தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளி தற்கொலை

திருப்பூர் மடத்துக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (38) மனைவி மெர்சி ராணி (31). டெய்லரான இவர் வேலை தேடி சோழமாதேவி சென்றுள்ளார். மது குடிக்கும் பழக்கம் உள்ளவரான கூலி தொழிலாளி கடன் சுமை அதிகரித்த நிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்தபோது வீடு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது மைக்கேல் ராஜ் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். உடனடியாக மெர்சி ராணி சத்தமிட அருகில் இருந்தவர்கள் வந்து கதவை திறந்து உள்ளே சென்று மைக்கேல் ராஜை மீடடு உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மைக்கேல் ராஜை பரிசோதனை செய்த டாக்டர் மைக்கேல் ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து மடத்துக்குளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் சுமையால் கூலி தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts