அரசியல்சமூகம்தமிழ்நாடு

முதலமைச்சர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய வேண்டும் – பாஜக அண்ணாமலை வாழ்த்து !

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதமைச்சர் குணமடைந்து நலம்பெற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண குணமடைந்து நலம்பெற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து கூறினார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பதிவில், ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Related posts