ஆற்றில் குளிக்க சென்ற சிறுவனை முதலை உயிரோடு விழுங்கிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரோடு விழுங்கிய சம்பவம்
மத்திய பிரதேச மாநிலம், ஷியோ போல் எனும் இடத்தில் சாம்பல் ஆறு ஓன்று உள்ளது. இந்த ஆற்றில் அந்த பகுதியை சேர்ந்த 10 வயதான சிறுவன் நேற்று காலை குளிக்க சென்றுள்ளான். ஆற்றின் கரையில் சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் குளித்து கொண்டிருந்தனர். திடீரென ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று அங்கு நின்றபடி கத்தி கூச்சலிட்டான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு ஓடி சென்று பார்த்தனர்.
அப்போது ஆற்றில் இருந்த பெரிய முதலை அந்த சிறுவனை உயிரோடு அப்படியே விழுங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், முதலையிடமிருந்து சிறுவனை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் சிறுவனை முதலை மொத்தமாய் விழுங்கியுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் முதலையை கயிறு வீசி பிடித்து கரைக்கு இழுத்து வந்து சிறுவனை மீட்பது குறித்து பேசிக்கொண்டிருந்தன. சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல் துறையினரும், வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அவர்கள் கிராம மக்களிமிருந்து முதலையை மீட்க முயன்றபோது சிறுவன் உயிருடன் தான் இருப்பான், அவனை முதலை வெளியில் கக்கும் வரை முதலையை விட மாட்டோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வனத் துறையினர் முதலையை மீட்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

