அரசியல்சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடு

முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று – ட்விட்டரில் பதிவு !

முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமான முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தால் தனிமைப்படுத்தி கொண்டு இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related posts