மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், ‘மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் 54வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறயுள்ளது. ஆனால், இணைவேந்தரான என்னிடமோ, உயர் கல்வித் துறை செயலாளரிடமோ விழா குறித்து எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ள வில்லை.
பட்டமளிப்பு விழாவுக்கு வேந்தர், இணைவேந்தர்களை சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவது வழக்கம். ஆனால், கௌரவ விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அழைக்கப்படுவது ஏற்புடையது அல்ல. பட்டமளிப்பு விழாவில் கடைபிடிக்கப்படும் மரபுகளை முறையாக கடைபிடிக்க தவறிய காரணத்தால் ஆளுநரை கண்டிக்கும் வகையில் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம்.
இது போன்ற பிரச்னைகள் எழக் கூடாது என்று தான் ஆளுநர் நீக்கி மக்களால் தேர்ந்தேடுக்கப்பட முதலமைச்சர் வேந்தராக இருப்பதற்கான சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்து ஆளுநருக்கு அனுப்பி வைத்தும், இன்னும் கையொப்பம் இடவில்லை என அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

