மாமல்லபுரத்தில் வரலாற்று சின்னமாக விளங்கும் கடற்கரை கோவிலின் சிற்ப கலைகளைப் பற்றியும் பல்லவமன்னரின் நடுநிலைப் போக்கினை ஆன்மீக ரீதியாக கடைபிடித்திருப்பதை பற்றிய தகவல்களை நாம் இப் பதிவில் பார்ப்போம்.
முதன்முதலில் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட கட்டுமான கோவில் மாபல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் ஆகும். இந்த கோவிலானது இரண்டம் நரசிம்மவர்மன் எனப்படும் பல்லவ மன்னன் ராஜாசிம்மனால் கட்டப்பட்டது.
இக்கோவிலானது நானுற்றுநாற்பது புராதான சின்னங்களில் ஒன்றான இந்த கோவில் 45 அடி உயரம் கொண்டது. தென்னிந்தியாவில் தமிழர்களின் சிற்பக்கலை மரபுகளை போற்றும் மிக முக்கியமான கோவிலாக இக்கோவில் கருதப்படுகிறது.
சிவலிங்கம் மற்றும் விஷ்ணுவுக்கான சன்னதி ஆகியவை இந்த கோவிலில் இடம்பெற்றுள்ளன. சைவம்,வைணவம் போன்ற அனைத்து மரபுகளையும் ஒன்றாக இடம்பெற்றிருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.
இக்கோவில் உள்ள செங்கற்களானது புகார்,உறையூர்,மாங்கொடி மற்றும் அரிக்கமேடு என சங்ககால இடங்களில் பயன்படுத்தப்பட்ட செங்கற்கள் போன்று காணப்படும்.
இந்த கடற்கரை கோவிலில் திருமால் தரையில் படுத்திருக்கும் கோளத்தில் ஒரு கோவில் இருக்கிறது. அதற்கு இரு பக்கத்திலும் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் இரு சிவன் கோவில் கட்டப்பட்டுள்ளன.
கிழக்கு நோக்கி கட்டிய கோவில் உயரமாகவும் ஐந்து அடுக்குகள் கொண்ட கோபுரத்தை கொண்டுள்ளது. மேற்கு நோக்கிய கோவில் சிறியதாக மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரத்தை கொண்டுள்ளது. இங்கு ஒரு பலிபீடமும் அதைச் சுற்றி நந்தி சிற்பங்களையும் காண இயலும்.
தென்னிந்தியாவில் கட்டப்பட்ட கோவில்களுக்கு முன்னோடியாக இக்கோவில் சொல்லப்பட்டது . பல்வேறு,கற்களை வெட்டியெடுத்து ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி செய்யப்பட்டவையே மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக்கோவில்.
இக்கோவிலானது 1984-ல் உலக பாரம்பரிய தலங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
இன்று மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கடலோர கோவிலைத் தவிர வேறு ஆறு கோவில்களும் கடல் நீருக்குள் மூழ்கின.இந்த கோவிலில் அழகிய சிற்பங்கள் கொண்ட சின்ன கருவறை ஒன்று உள்ளது. அந்த சிற்பங்களுக்கு கீழே ஒரு சிறிய லிங்கமும் அமைந்திருக்கும்.