Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»உணர் திறனறிவு எனப்படும் Emotional Intelligence பற்றித் தெரியுமா?

உணர் திறனறிவு எனப்படும் Emotional Intelligence பற்றித் தெரியுமா?

May 31, 20225 Mins Read23 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஒருவரின் புத்திக்கூர்மை அல்லது அறிவுத்திறனை I.Q என்று அளவிட்டுச் சொல்ல முடியும். ஆனால் இதற்கு மேலயும் ஒருவரின் அறிவுத்திறனை அளக்கும் அளவுகோல்கள் உண்டு. அது “Emotional Intelligence” என சொல்லப்படும் “EIQ/EQ” ”உணர் அறிவுத்திறன்” என்பதாகும். I.Q ஐ விட 3 மடங்கு பெரியது.

emotional intelligence

”உணர் திறனறிவு” என்பது நாம் எவ்வாறு நம்முடைய உணர்வுகளையும், மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு இறுதிவரை அவர்களுடனான உறவுகளைப் பேணுவதாகும்.

டானியல் கோல்மேன் என்ற அமெரிக்க உளவியல் நிபுணர் இதனை 5 கூறுகளாக பிரித்துள்ளார்.

Daniel Goleman

1. தன்னையறிதல் (Self-Awareness)

2. சுயகட்டுப்பாடு (Self-Regulation)

3. ஊக்கமுடமை (Motivation)

4. சமூக அறிவு (Social Skills)

5. பச்சாதாபம் (Empathy)

தன்னையறிதல் :

தன்னையறிதல் என்பது ஒர் கலை. பிறரை அறிந்தவன் புத்திசாலி, தன்னை அறிந்தவன் ஞானி என்பது சீனத்து ஞானி ஒருவரின் வாக்கு. சரி, நான் என்னை அறிந்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு புத்தரைப் போல போதிமரத்தடியை தேடிச் செல்ல வேண்டியதில்லை. போதிமரத்தை தேடிச்செல்ல நாம் ஒன்றும் புத்தனும் அல்ல. பிறகு எப்படி?

நாம் நம்முடைய உணர்வுகள், விருப்பங்கள், வெறுப்புகள், வாழும் முறை, ஆளுமைத் திறன், பலம், பலவீனம் போன்றவற்றை தெரிந்தும், புரிந்தும் வைத்திருப்பது தன்னையறிதல் ஆகும். சில வழிமுறைகள் மூலம் இதனை புரிந்து கொள்ளலாம்.

self awareness

நாம் நம்மிடமும், பிறரிடமும் நேர்மையாக இருக்க வேண்டும். நேர்மையாக இருத்தல் என்பது தன்னை அறிந்து கொள்ள நாம் எடுக்கும் முதல் செயல்.

பிறர் நம்மைப் பற்றி ஏன் இப்படி நினைக்கிறார்கள் என்பதை அவர்கள் இடத்தில் இருந்து தெரிந்து கொள்ளுதல். ஒருவேளை அவர்கள் சொல்வது சரியென்றால் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும், தவறு என்றால் புரிய வைக்க வேண்டும்.

கடந்த கால நிகழ்வுகளின் மூலம் நாம் செய்த தவறுகளை அறிந்துகொண்டு, வருங்காலத்தில் அதே தவறை செய்யாமல் தடுக்க வேண்டும்.

எந்த நிகழ்வில் எப்படி நடந்து கொண்டோம், ஏன் அது போல நடந்தது, போன்றவற்றை குறிப்பு எடுத்துக் கொள்வதன் மூலம், நம்மை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சுயகட்டுப்பாடு :

சுயகட்டுப்பாடு என்பது, நாம் எவ்வாறு நம் உணர்வுகளை சரியான முறையில் வழிநடத்துவது மட்டும் அல்லாமல் சரியான மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க முறையில் வெளிப்படுத்துவதும் ஆகும்.

உதாரணத்திற்கு, நீங்கள் மேலாளராக இருக்கும் வங்கியில், உங்களிடம் மிகவும் திறமையான ஊழியர் ஒருவர் நெடுநாளாக வேலை செய்கிறார். ஒரு நாள் ஒர் கலந்துரையாடலில் அவர் தெரியாமல் செய்த சிறு பிழைக்காக , பொது இடம் என்றும் பார்க்காமல் அவரை திட்டி விடுகிறீர்கள்.

அவரும், இதை மிகப்பெரிய அவமானமாக கருதி வேலையை விட்டுவிடுகிறார். அவரைப்போல இன்னொருவர் கிடைக்க உங்களுக்கு பல வருடங்கள் தேவைப்படலாம்.

உங்களுக்கும் இழப்பு, அவருக்கும் இழப்பு. இதையே நீங்கள், அவரை தனிமையில் அழைத்து, இந்தத் தவறை சுட்டிக்காட்டி இருந்தால், அவரும் வேலையில் நீடித்திருப்பார். உங்களுக்கும் இழப்பு கிடையாது.

இதையும் படிக்க :  கும்பகோணம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது

self-regulation

எனவே உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்துவது மிகவும் அவசியம். உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி, அதனை, சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். இதோ சில சுயக்கட்டுப்பாட்டு வழிமுறைகள்.

வேண்டுமென்றே சிலவற்றைச் செய்தல். உங்களை மருத்துவர் தினமும் நடக்கச் சொல்லியிருக்கிறார். அனால், உங்களுக்கு சோம்பேறித்தனத்தின் காரணமாக விருப்பமே இல்லை, அனாலும் நடந்தே ஆக வேண்டும்.

இப்படிப் பட்ட நிலையில், கடைகளுக்குச் செல்லும் போது வேண்டுமென்றே வண்டிச்சாவியை வீட்டிலேயே வைத்துவிட்டு வரவேண்டும். இவ்வாறு திட்டமிட்டுச் செய்வதன் மூலம் உங்களை கட்டுப்படுத்தலாம்.

நீங்கள் எந்த நேரங்களில் அல்லது இடங்களில் உங்களை அறியாமல் நடந்து கொள்கிறீர்கள் என்பதை தெரிந்துகொண்டு அதனை தவிர்த்தல் அல்லது அதனை விட்டு விலகிப்போதல் அல்லது வேறு ஒர் வேலையில் கவனத்தை செலுத்துதல்.

எப்போதெல்லாம் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது என்பதை குறிப்பெடுத்துக் கொண்டு, மறுமுறை அதேபோல நடந்தால் முன்செய்த தவறை எப்படி திருத்திக்கொள்வது என்பதை திட்டமிடுதல்.

தன்னை கட்டுப்படுத்த முடியாத நேரங்களில், ஆழ்மூச்சுப் பயிற்சி, பத்திலிருந்து கீழாக எண்ணுதல், தியானம், ஒர் நிமிட மவுனம், பிடித்த பாடலை அசைபோடுதல் போன்றவற்றைச் செய்வதன் மூலம், நம்மைக் கட்டுப்படுத்த முடியும்.

ஊக்கமுடைமை :

ஊக்கமிருந்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான் என்பது நம்மிடம் இருக்கும் பழமொழி. அடுத்தவர் நம்மை ஊக்குவிக்காவிட்டாலும் , நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நம்மிடம் எதிர்மறை எண்ணங்கள் வலுப்பெற்றுவிடும்.

தூக்கமின்மை, உடல் மற்றும் மனச்சோர்வு, உணவை அறவே வெறுப்பது, மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல், சிந்தணைக் குறைபாடு என்பன எதிர்மறை எண்ணங்களால் வரும் கடும் விளைவுகள். எவ்வாறு இந்த திறனை வளர்த்துக்கொள்வது?

இயல்பு நிலையை விட்டு வெளியே வரவேண்டும். புதியனவற்றை செய்ய விளைவுகளைப் பற்றி கவலை கொள்ளாமல் இருக்க வேண்டும்.

motivation

தவறு செய்யாமல் எவராலும் இருக்க முடியாது,மேலும், செய்த தவறை நினைத்து மனம் ஒடிந்து போய்விட வேண்டாம். மாறாக அந்த தவறு எதனால் நடந்தது,அதை எவ்வாறு சரி செய்வது, வருங்காலத்தில் எவ்வாறு தவிர்ப்பது என்பதைக் குறித்து திட்டமிடுதல்.

பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் இல்லை, எனவே, இதனைக் கண்டு மனம் துவளாமல், எதையும் எதிர்கொள்ளும் மன உறுதியையும், நேர்மறை என்ணங்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

துவங்கிய செயலை முடிக்க வேண்டும், எந்தச் சூழலிலும் நிறுத்தக் கூடாது.

நம்முடைய அறிவையும், திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் .உதாரணம்: புத்தங்கள் படிப்பது.

உங்கள் குறிக்கோள்களை சித்திரங்களாகவும், படமாகவும், வரைந்தும், எழுதியும் வைத்துக் கொள்ளுதல், உங்களை சிந்தணையை தூண்டும். உங்கள் அறையின் சுவற்றில் வைத்திருப்பது, உங்கள் குறிக்கோளை நோக்கி உங்களை உந்தித் தள்ளும். (இதனைப் பற்றி பின்னர் விரிவாக காணலாம்)

இதையும் படிக்க :  அனைத்து அலுவலரும் மாஸ்க் அணியவேண்டும் - தமிழக அரசு அறிவிப்பு !

உங்கள் கனவுகளை பல பகுதிகளாக பிரித்து , ஒவ்வொன்றிக்கும் ஒர் காலக்கெடுவை முடிவு செய்து, அதற்குத் தேவையானவற்றைச் செய்யவும்.

உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கனவுகளை உங்காளால் நிறைவேற்ற முடியும், யாராலும் தடுக்க முடியாது.

சமூக அறிவு :

மனிதன் என்பவன் ஒர் சமூக விலங்கு. அவனால் தனியாக எதும் செய்ய முடியாது. சமூகத்தைச் சார்ந்த்துதான் இருக்க் வேண்டும். அதோடு மட்டும் இல்லாமல், நம் வாழ்நாளில் பாதியை நாம் வெளியிடங்களிலும், நண்பர்களோடும், அலுவலகத்திலும் கழிக்கின்றோம். புது இடங்களுக்கும், நாடுகளுக்கும் செல்லும் போது எவ்வாறு நண்பர்களை சேர்த்துக் கொள்வது, எப்படி பழகுவது என தெரிந்து வைதிருப்பது அவசியம். ஆகவே, நமக்கு சமூக அறிவு மிகவும் தேவையான ஒன்று.

சமூக அறிவு என்பது, நாம் எவ்வாறு பிறரின் உணர்வுகளை நிர்வாகம் செய்கிறோம் என்பதாகும். நம்முடைய சமூக அறிவை வளத்துக்கொள்ள சில வழிமுறைகள்.

பிறர் சொல்வதை கவனமுடன் கேட்கவும். கேட்பதைப் போல நடிக்காமல் உண்மையான விருப்பத்துடன் கேட்கவும்.

நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என எண்ணுகிறீர்களோ, அதே போல, பிறரையும் நடத்துங்கள்.

எந்தச் சூழலிலும் நேர்மறையான எண்ணங்களோடு இருத்தல்.

நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுதல். ஒருவரை காயப்படுத்துவது நகை உணர்வாகாது.

புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுதல்.

பச்சாதாபம் :

பச்சாதாபம் என்பது, நாம் எவ்வாறு மற்றவர்களின் உணர்வுகளையும், நம்முடைய செயல்கள் எவ்வாறு அடுத்தவரை பாதிக்கும் என்பதை அறிவதாகும்.

உதாரணத்திற்கு. இரண்டு பேர் அடங்கிய உங்களது குழுவில் பணிபுரியும் உங்கள் தோழியின் கணவருக்கு திடீரேன நெஞ்சு வலி, அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

அவரால் இரண்டு நாட்களுக்கு வரமுடியாது. அனால், நீங்களோ நாளைக்குள் உங்கள் திட்டத்தை முடிக்க வேண்டும். மற்ற ஊழியர்களும் அவரவர் வேலையில் இருக்கிறார்கள், உங்களுக்கு உதவ முடியாது.

Empathy

இப்போது , நீஙக்ள் உங்கள் தோழியின் வேலையையும் சேர்த்து செய்து கொடுக்கப்பட்ட காலகெடுவுக்கு திட்டத்தை முடித்து விடுகீர்கள். இதுவே பச்சாதாபம் (empathy). அதாவது, மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அதற்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வது. இத்திறனை வளர்க்க இதோ வழிமுறைகள்.

பிறரிடம் மனம் விட்டு பேசுங்கள். அவர்கள் சொல்வதை முழுதாகவும், முழு விருப்பத்துடனும் கேளுங்கள்.

ஒருவர் பேசுவதற்கு முன் , குறுக்கே பேச வேண்டாம்.

ஏதேனும் கேள்விகள் இருப்பின், அவர் பேசியபின் கேட்கவும்.

நம்முடைய உணர்வுகளை புரிந்து கொள்ளுதல்.

பிறரின் நிலையையும் அவர்கள் இடத்திலிருந்து புரிந்து கொள்ளுதல்.

Emotional Intelligence Quotient

வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல்.

கேட்டால் மட்டும் அறிவுரை வழங்கவும்.

இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில், அலுவலகத்தையும், இல்லத்தையும், நண்பர்களையும் நிர்வகிக்க EQ எனப்படும், ”உணர் திறனறிவு” மிகவும் தேவையான ஒன்று.

மேலும், இது பிறந்தவுடனே இருக்கும் தனித் திறைமைகள் அல்ல. சித்திரமும் கைபழக்கம் என்பதைப் போல, பயிற்சி செய்தால் போதும். நாமும் வளர்த்துக் கொள்ளலாம்.

Daniel Goleman Emotional Intelligence Empathy featured Intelligence quotient Motivation Personality Psychology Self-Awareness Self-Regulation Social Skills
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகல்லிலே கலைவண்ணம் கண்டான்! – மலைக்க வைக்கும் மாமல்லபுரம் கடற்கரை கோவில்கள்
Next Article அரவிந்த் மருத்துவமனைக்கு சீல் – தவறான சிகிக்சையால் பெண் உயிரிழப்பு !

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.