தமிழ்நாடுமருத்துவம்

அரவிந்த் மருத்துவமனைக்கு சீல் – தவறான சிகிக்சையால் பெண் உயிரிழப்பு !

சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு. உறவினர்கள் உடலை வாங்க மறுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம்

எடப்பாடி, ஜலகண்டாபுரம் அடுத்த சவுரியூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (31) இவரின் மனைவி சங்கீதா (28). இவர்களுக்கு 11 வயதில் பெண் குழந்தையும், 7 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. அவர்கள் விசை தறி தொழில் செய்து வருகின்றனர். இதனிடையே சங்கீதாவிற்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிக்சை செய்வதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன் எடப்பாடியில் உள்ள அரவிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை முடிந்து வீடு திரும்பினார்.

aravind hospital idappadi

தொடர் அறுவை சிகிச்சை

பின்னர், ஒரு வரம் கழித்து அடிக்கடி சங்கீதாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் திரும்பவும் அதே மருத்துவமனையில் சேர்ந்து பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். வயிற்றில் ரத்தம் கட்டியுள்ளது என்று கூறி இரண்டாவது முறையாக அறுவை சிகிக்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை சங்கீதாவிற்கு திடீர் என்று மூச்சு திணறல் ஏற்பட்டதால் இந்த முறையும் அரவிந்த் மருத்துவமனையில்  சேர்த்துள்ளனர். மூன்றாவது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று சங்கீதா சிகிக்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்தார்.

salem women death

உறவினர்கள் முற்றுகை போராட்டம்

இதன் பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த சங்கீதாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவரை கைது செய்ய கோரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உறவினர்கள் ஒருசிலர் மருத்துவமனையின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளார்கள்.

விசாரணை

தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் அனந்தன், சந்திரலேகா தலைமைலான காவல் துறையினர், வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அங்கு வந்தனர். விசாரணை நடத்திய அதிகாரிகள் மருத்துவமனையில் இது போன்று அடிக்கடி பல தவறான சிகிச்சையால் பலர் உயிரிழந்தாகவும் மருத்துவமனை தொடர்ந்து இயங்க கூடாது என்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

police - விசாரணை -

தனியார் மருத்துவமனைக்கு சீல்

சங்கீதாவின் உறவினர்களின் தொடர் முற்றுகையாலும், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். எட்டு மணி நேர போராட்டதிற்கு பிறகு சங்கீதாவின் உறவினர்கள் உடலை வாங்கி சென்றனர். சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனைகாக அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் நேற்று 3 முறை அறுவை சிகிச்சை செய்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் சேலம் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

hospital - women - death - salem

Related posts