44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் நடிகர் கமல் ஹாசனின் குரலில் தமிழகத்தின் வரலாறு ஒலித்தது.
துவக்க விழா
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். மேலும், இந்த விழாவில் பங்கேற்க நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் ரஜினிகாந்த், கார்த்தி, விக்னேஷ் சிவன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த விழாவில் நடிகர் கமல் ஹாசன் பின்னணி குரலில் தமிழ்நாட்டின் வரலாறு குறித்த வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது.

